நீலகிரி: கரோனா தொற்று தமிழ்நாட்டில் குறைந்துவரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து, வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளது. அண்டை மாநில வாகனங்கள் தமிழ்நாட்டிற்கு இ- ரெஜிஸ்டர் செய்து வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி வர நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் - ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா - corona negative certificate
கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
இந்நிலையில், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இ ரெஜிஸ்டர் மட்டுமின்றி ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:செப். 11இல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு