நீலகிரியில் கரோனா பரவல் அதிகரிப்பு: விதி மீறுவோர் மீது வழக்குப் பதிவு! - Nilgiris Collector Innocent Divya
நீலகிரி மாவட்ட மலை கிராமங்களில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம்.பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வோர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட நிர்வாம் உத்தரவு.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கரோனாவின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மலை மாவட்டமான நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர தடைவிக்கபட்டதாலும் சுற்றுலா தலங்கள் மூடபட்டுள்ளதாலும், கரோனா பரவல் கட்டுபாட்டில் இருந்து வந்தது.
இதனால் நாள் ஒன்றுக்கு 50க்கும் குறைவானோருக்கே கரோனா தொற்று உறுதி செய்யபட்டு வந்தது. கடந்த ஒரு மாத காலமாக நகர்ப்புற பகுதிகளில் கரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது மலை கிராமங்களுக்கும் பரவ தொடங்கி உள்ளது. இதனால் மே.03ஆம் தேதி ஒரே நாளில் 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுபாடுகளை விதிக்க தொடங்கி உள்ளது.
முதற்கட்டமாக, முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோர் அபராத தொகையை செலுத்தாமல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அவர்கள் மீது ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடபட்டுள்ளது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கபடுவோரின் குடும்பத்தினர் வீட்டிற்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் அருகாமையில் உள்ள வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணி இன்று முதல் துவங்கப்படும்.
மக்கள் அதிகமாக கூடும் உழவர் சந்தைகள் மூடபட்டு, வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. அதே போல உதகை மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் தினந்தோறும் 30 சதவித கடைகள் என சுழற்சி முறையில் திறக்கும் நடைமுறை கொண்டு வரப்படுகிறது. வெளி மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் நீலகிரி மாவட்ட மக்கள் தேவையின்றி வெளி மாவட்டத்திற்க்கு செல்ல வேண்டாம். அப்படி அவசர தேவைக்காக செல்பவர்கள் வீட்டிலேயே 3 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா தொற்று: சிகிச்சையிலிருந்த 15 காவல் துறையினர் உயிரிழப்பு!