நீலகிரி மாவட்டம் குன்னூர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சமீப காலமாக அடிக்கடி வந்து செல்கின்றன. இந்நிலையில், குன்னூர் நகரின் காந்திபுரம், இந்திராநகர் குடியிருப்புப் பகுதிக்குள் தாயை பிரிந்த மரநாய்க்குட்டி ஒன்று தாயைத் தேடி வந்துள்ளது. ஊருக்குள் வந்த மரநாயை கரடிக்குட்டி என நினைத்து ஊர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மரநாயை கரடிக்குட்டி என நினைத்து அச்சமடைந்த கிராம மக்கள்! - நீலகிரி
நீலகிரி: குன்னூர் குடியிருப்புப் பகுதிக்குள் தாயை தேடி வந்த மரநாயை பிடித்து அப்பகுதி மக்கள் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மரநாய்
பின்னர் ஊருக்குள் வந்தது கரடிக்குட்டி அல்ல, மரநாய்தான் என தெரிந்ததையடுத்து, அதனைப் பிடித்த ஊர் மக்கள், வனக்காவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த மரநாய்க்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.