தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியர் தலைமையில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் சேதம்! - ஆட்சியர் தலைமையில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் சேதம்

நீலகிரி : குன்னூரில்  அண்மையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை சிலர் சேதம் ஏற்படுத்தியுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Coonoor tree planting damage

By

Published : Nov 25, 2019, 6:01 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் பின்புறம் அரசுக்கு சொந்தமான நிலங்களில் புதர்கள் மண்டி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயின் சமுதாய மக்கள் அந்த பகுதியை சுத்தம் செய்து பத்தாயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குன்னூரில் உள்ள காந்தி மண்டபத்தை சுற்றி முட்புதர்கள் நிறைந்து காணப்பட்டதை அப்பகுதி தன்னார்வலர்கள் சிலர் இணைந்து முட்புதர்களை வெட்டி அகற்றினர். தற்போது சீர்செய்யப்பட்ட இந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

சேதமடைந்த மரக்கன்றுகள்

தாங்கள் சுத்தம் செய்த இடத்தில் வேறு யாரும் மரக்கன்றுகள் நடவு செய்ய கூடாது என்றவகையில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை இரவோடு இரவாக சிலர் சேதம் ஏற்படுத்தியுள்ளனர். அதனால் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் வீணாகியுள்ளது. அரசு நிலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய இரு தரப்பினர் போட்டி போடும் சம்பவம் குன்னூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

நீலகிரியில் அமமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு நிகழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details