தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச கராத்தே போட்டி - குன்னூர் மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை

குன்னூரில் ஆலன் திலக் கராத்தே மாணவ, மாணவிகள் 21 பேர் சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

By

Published : Aug 12, 2021, 6:44 PM IST

சர்வதேச கராத்தே போட்டி
சர்வதேச கராத்தே போட்டி

நீலகிரி: உயர் மலைப்பகுதி காலநிலைக்கு ஏற்ப ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு மாணவ, மாணவிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதேபோல குன்னூர் பகுதிகளில் கராத்தே பயிற்சியில் மாணவ, மாணவிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தோனேசியாவில் இருந்து ஆன்லைன் மூலம் சர்வதேச கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 30 நாடுகளில் இருந்து நான்கு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பதக்கங்கள் வென்ற மாணவர்கள்

இதில், குன்னூர் அருவங்காடு அருகேவுள்ள தனியார் பயிற்சி மாணவ, மாணவிகள் 25 பேர் கலந்து கொண்டனர்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த 21 பேர் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.
இவர்களுக்கு குன்னூரில் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சர்வதேச கராத்தே போட்டி

இதையும் படிங்க: 75ஆவது விடுதலை நாள்: 75 சாதனை பெண்களின் காபி ஓவியம் - அசத்தும் மாணவி

ABOUT THE AUTHOR

...view details