நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன், உபதலை போன்ற பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி நகர்ப் பகுதிகளுக்குள் காட்டெருமைகள் உலா வருவதால் பொதுமக்களும் தேயிலைத் தொழிலாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஊருக்குள் புகும் காட்டெருமைகளால் ஓட்டம் பிடிக்கும் தொழிலாளர்கள்!
நீலகிரி : குன்னுார் நகர்ப் பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி புகும் காட்டு எருமைகளால் தேயிலைத் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாள்தோறும் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின் போது திடீரென்று காட்டெருமைகள் கூட்டமாக தேயிலைத் தோட்டத்தில் நுழைவதால், அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனர். மேலும் வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் ராணுவ வீரர்கள் பயிற்சியின்போது அவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
மேலும் கன்டோன்மென்ட் மருத்துவமனை ஆரம்பப்பள்ளி போன்றவற்றிற்கு மாணவர்களும், நோயாளிகளும் அவ்வழியாகச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. காட்டெருமைகளை வனத்திற்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டு என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.