தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் கட்டணம் செலுத்தாத நகராட்சி அலுவலகத்தின் மின் இணைப்பு துண்டிப்பு - Municipal Office

நீலகிரி: மின் கட்டணம் செலுத்தப்படாததால் குன்னூர் நகராட்சி அலுவலகத்தின் மின்சாரத்தை மின் வாரியம் அதிரடியாகத் துண்டித்துள்ளது.

மின்சார வாரியம்

By

Published : Jun 21, 2019, 5:08 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு பெரும்பாலான பணிகள் கணினி மூலமாகவே நடைபெற்று வருகிறது. மேலும், நகர பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள், ஹைமாஸ் விளக்குகள் உள்ளிட்டவையும் நகராட்சிக்குட்பட்டே செயல்பட்டுவருகிறது.

மின் கட்டணம் செலுத்தாத நகராட்சி அலுவலகத்தின் மின் இணைப்பு துண்டிப்பு

இந்நிலையில், மின்சார வாரியத்திற்குகுன்னூர் நகராட்சி அலுவலகம் 75 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தவேண்டும் எனவும், இதற்கான கால அவகாசத்தை மின் வாரியம் வழங்கியும் நகராட்சி அலுவலகம் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, குன்னூர் நகராட்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு இன்று திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால், வழக்கமாக நடைபெறும் பணிகள் அனைத்தும் பாதியிலேயே நின்று அன்றாட பணிகள் ஸ்தம்பித்தது.

இது குறித்து குன்னூர் நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘மின்சாரம் இல்லாததால் இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் நாளை சிமி அமைப்பின் தடை நீட்டிப்பு தொடர்பான தீர்ப்பாயம் நடக்க உள்ளதால், நீதிபதிகள் வருகை தர உள்ளனர். எனவே, நகராட்சி அலுவலகமும், மின் வாரியமும் இது குறித்து கலந்தாலோசித்து விரைந்து முடிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details