கோடை விடுமுறையை முன்னிட்டும், உதகையில் நடைபெற்றுவரும் மலர்கண்காட்சியைக் காணவும் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுவதால், மாவட்ட நிர்வாகம் குன்னுார் மலைப்பாதையை ஒருவழிப்பாதையாக மாற்றி வாகன நெரிசல் ஏற்படாமல் நடவடிக்கை எடுத்துவருகிறது.
குன்னுார் மலைப்பாதையில் வாகன நெரிசல்! - Nilgiris
நீலகிரி: குன்னூர் மலைப்பாதையில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் அதிகரித்துக் காணப்படுவதால், பல கி.மீ. துாரத்திற்கு நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
traffic-jam
இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகள் மேட்டுப்பாளையத்திலிருந்து சமவெளிப் பகுதிகளில் குன்னூர் வரை மலைப்பாதையில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் வாகனங்கள் அதிகரித்துக் காணப்படுவதால், இந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் பல கிலோமீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பல்வேறு சிரமங்களுடன் வாகனங்களை இயக்க வேண்டிய நிலைக்கு சுற்றுலாப்பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.