வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பை சந்தித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் , கோத்தகிரி, ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நீலகிரியில் ஐந்து இடங்களில் நிலச்சரிவு! - Heavy Rain Across Tamilnadu
நீலகிரி: குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் மற்றும் பர்லியாறு உள்ளிட்ட பகுதிகளில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் மற்றும் பர்லியாறு பகுதிகளில் ஐந்து இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மரங்கள், மண் குவியல்கள், பாறைகள் உள்ளிட்டவை சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. ஜேசிபி வாகனங்கள் மூலம் சாலைகளில் விழுந்துள்ள பாறைகளை அகற்றி வருகின்றனர். இந்த மழையினால் கடுங்குளிர் நிலவி வருவதோடு, பொதுமக்களின் இயல்பு வழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: கனமழையால் நெடுஞ்சாலையின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு!