தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் - மே.பாளையம் ஒருவழிப்பாதை சிக்கல் - குன்னூர் மக்கள் மட்டும் இருவழியாக பயன்படுத்த அனுமதி! - ஊட்டி கிளைமேட்

குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

Tourist drivers
Tourist drivers

By

Published : May 7, 2023, 3:28 PM IST

நீலகிரி: குன்னூர் சமவெளிப் பகுதிகளில் அதிக அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையினை ஒரு வழிப் பாதையாக மாற்றி, குன்னூரில் இருந்து சமவெளிப் பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர். கோத்தகிரி வழியாக குன்னூர் வாகனங்கள் சென்றால் 35 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லக்கூடியதனால், அதிக நேரம் ஆவதால் சுற்றுலாப் பயணிகளும் குன்னூர் நகர சுற்றுலா ஓட்டுநர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குன்னூர் சுற்றுலா ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில், தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரனை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று குன்னூர் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஓட்டுநர்கள் மற்றும் குன்னூர் நகர மக்களின் வாகனங்கள் மட்டும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வழிப் பாதையாக அனுமதி அளித்து திங்கள் முதல் வெள்ளி வரை குன்னூர் நகர மக்களின் வாகனங்கள் மற்றும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக குன்னூர் சுற்றுலா ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர்‌ நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு ஆர்வம் குறைந்ததா?

ABOUT THE AUTHOR

...view details