தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம் - கண்காணிப்பு கேமரா பொருத்திய வனத்துறை! - forest department

நீலகிரி: குன்னூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

By

Published : Nov 3, 2020, 10:46 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் குடியிருப்பு அருகே விறகுகள் அடுக்கி வைத்த இடத்தில் இரு குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் வரையாடு ஒன்றை சிறுத்தை அடித்து கொன்று இழுத்துச் சென்றதை பொதுமக்கள் பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் ஆய்வு செய்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினர். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் அப்பகுதியில் நடமாட வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறுத்தை உட்பட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: இனி வாட்ஸ்அப்பில் மெசேஜ் மறைந்துபோகுமாம்: புதிய வசதி அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details