நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில், தாமதமாகத் தொடங்கிய பருவ மழை டிசம்பர் வரை நீடித்தது. ஜனவரியில் தொடர்ந்து பனிப்பொழிவு இருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான அருவங்காடு, காட்டேரி, பர்லியார், எடப்பள்ளி, பாய்ஸ் கம்பெனி வெலிங்டன் பகுதிகளில் காலை முதலே மிதமான மழை பெய்தது.
மேலும் கடுமையான மேகமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க சிரமம் அடைந்தனர். சுற்றுப்புற பகுதிகளில் குளுகுளு கால நிலை நிலவுகிறது. சுற்றுலா மையங்களில் குறைந்தளவே சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.