தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 7, 2019, 5:40 AM IST

ETV Bharat / state

ஆர்கானிக் தேயிலை பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் குன்னூர் விவசாயிகள்

நீலகிரி: ஆர்கானிக் தேயிலைக்கு வெளிசந்தையில் அதிக விலை கிடைப்பதால் அதனை உற்பத்தி செய்ய குன்னூர் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

tea

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தற்போது தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்த நிலையில், ஆர்கானிக் தேயிலையை உற்பத்தி செய்ய விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். குறிப்பாக, சில்வர் டிப்ஸ், கிரீன் டீ உள்ளிட்டவைகளுக்கு சர்வதேச மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது.

இவற்றில், இயற்கை சார்ந்த முறையில் தரமான ‘ஆர்கானிக் சில்வர் டிப்ஸ் மற்றும் ஆர்கானிக் கிரீன் டீயை தயாரிக்கவே விவசாயிகள் விரும்புகின்றனர். இந்த தேயிலைகள் எந்தவொரு ரசாயனமும் கலக்காமல் முழுக்க முழுக்க இயற்கையான முறையில் கைகளிலேயே தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

ஆர்கானிக் தேயிலையில் ஆர்வம் காட்டும் குன்னூர் விவசாயிகள்

சர்வதேச சந்தையில், கிராக்கி அதிகம் உள்ளதால், இங்கு உற்பத்தியாகும் தேயிலை தூள்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 28 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ஆர்கானிக் சில்வர் டிப்ஸ் டீயை குடிப்பதால், உடல் பருமன் குறைகிறது. இதய நோயின் ஆரம்ப கட்டமாக இருப்பவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம். எனவே இந்த வகை தேயிலை துாள்களை அதிகளவில் உற்பத்தி செய்ய குன்னூர் பகுதியில் உள்ள விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் தற்போது களமிறங்கியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details