தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைப்பாதையில் விபத்து - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 22 மாணவர்கள்! - சுற்றுலா சென்ற மாணவர்கள்

நீலகிாி: குன்னுாா், ஊட்டி மலைப்பாதையில் பிரேக் பிடிக்காமல் சென்ற டெம்போ வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதிா்ஷ்டவசமாக அதில் பயணித்த 22 கல்லுாாி மாணவா்கள் உயிா் தப்பினா்.

coonoor accident

By

Published : Oct 7, 2019, 9:05 PM IST

நீலகிாி மாவட்டத்தில் தற்போது இரண்டாம் சீசன் தொடங்கியுள்ளதாலும், ஆயுத பூஜை தொடா் விடுமுறையாலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகாித்துக் காணப்படுகிறது. இதனால் மலைப்பாதைகளில் அதிகளவு போக்குவரத்து நொிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிவகாசியிலிருந்து 22 கல்லுாாி மாணவா்கள், ஊட்டிக்குச் சுற்றுலா வந்து சுற்றிப்பாா்த்துவிட்டு மீண்டும் சிவகாசிக்கு டெம்போவேனில் சென்று கொண்டிருந்தனா். அப்போது ஊட்டி - குன்னுாா் மலைப்பாதையில் உள்ள காணிக்கராஜ் நகா் அருகே சென்று கொண்டிருந்த போது டெம்போவேனில் பிரேக் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த டெம்போவேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவா்கள் அனைவரும் உயிா்தப்பினா்.
உடனடியாக பின்னால் வந்த வாகன ஓட்டிகள் வேனில் சிக்கிக்கொண்ட மாணவர்களை மீட்டனா். இதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவா்களுக்கு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 22 மாணவர்கள்!

இந்த விபத்தின் காரமணாக குன்னுாா் - ஊட்டி மலைப்பாதையில் இரண்டு மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அருவங்காடு போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதையும் படிங்க:யார் வாகனம் இது? - விசாரிப்பதற்குள் போலீஸ் வாகனத்தை இடித்துவிட்டு விரைந்த டொயோட்டா ஃபார்ச்சூனர்!

ABOUT THE AUTHOR

...view details