தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதுகாப்புப்படை வீரர்-வீராங்கனைகளின் குதிரை சாகச நிகழ்ச்சி - coonoor

நீலகிரி: குன்னூரில் வெலிங்டன் ராணுவ மையப்பகுதிகளில் பாதுகாப்புப்படை வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு அசத்திய குதிரை சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ARMY HORSE SHOW

By

Published : Apr 7, 2019, 1:28 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூரில் வெலிங்டன் ராணுவ மையப்பகுதிகளில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி உயர் அலுவலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களுக்கு சிறப்பு பயிற்சியாக குதிரை சவாரி ஜிம்கானாவில் நடத்தப்பட்டுவருகிறது. குன்னூரில் மவுண்ட்டன் ஜிம்கானா என்ற பெயரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை அலுவலர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்ட குதிரை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் குதிரைக்கான ஓட்டப்பந்தயம், ஆசர்லே, 4 ஜம்பிங், ஷோ ஜம்பிங்க், டிரிக் ஜம்பிங், பால் அண்ட் பக்கெட் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று அசத்தினார்கள். இதில் துள்ளி சீறிப்பாய்ந்து போட்டி போட்டுக்கொண்டு முந்தி சென்ற குதிரைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பின்பு நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில், நெருப்பு வளையத்திற்குள் குதிரைகள் பாய்வதும், குதிரையில் இருந்தே ஈட்டி எறியும் போட்டிகளும் நடத்தப்பட்டது.

பின்பு வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகளை லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.வி.கே.மோகன் வழங்கினார். குதிரை சாகசகங்களில் ஈடுபட்டது தங்களுக்கு பெருமையாக உள்ளது என போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் தெரிவித்தனர்.


ABOUT THE AUTHOR

...view details