நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்ப தொடங்கியுள்ளன. இதனிடையே மலைக் காய்கறி தோட்டங்களில் மழைநீர் தேங்கக்கூடிய அபாயம் நீடிக்கிறது.
கனமழையால் மலைக் காய்கறிகள் அழுகும் அபாயம்! - நீலகிரி மலை காய்கறிகள் அழுகும் அபாயம்
நீலகிரி: தொடர் கனமழையால் மலைக் காய்கறிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதனை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மழை தொடர்ச்சியாகப் பெய்யும் பட்சத்தில் மண்ணுக்கு அடியில் விளையக் கூடிய கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற பயிர்கள் அழுகக்கூடிய சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் பாலாடா, இத்தலார், கல்லக்கொரை, கேத்தி பாலாடா, கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களை மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் அறுவடை செய்து சந்தைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தற்போது அறுவடை செய்யப்படுவதால் மலைக் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க: பள்ளிகளில் மாணவர்களுக்கான காய்கறித் தோட்டம்: மத்திய அரசு புதிய முயற்சி!