உதகை அடுத்த காந்தள் புதுநகர் பகுதியில் மூன்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வீட்டின் தடுப்பு சுவர் மீது ஏறி விளையாடியபோது, எதிர்பாராத விதமாக தடுப்பு சுவர் இடிந்துள்ளது. இதில் தினேஷ் என்ற 10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
உதகையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு - சிறுவன் மரணம்
நீலகிரி: உதகை அடுத்த காந்தள் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது வீட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் தினேஷ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
Child death in ooty
மேலும், இரண்டு சிறுவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து உதகை புறநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுவன் தினேஷ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 5000 மரங்களை வெட்ட இடைக்காலத் தடை: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!