நீலகிரி: உதகையில் 124 ஆம் ஆண்டு மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்பட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி, தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
மலர் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 19) மாலை கோவையில் இருந்து புறப்பட்டு குன்னூர் வந்தடைந்தார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் லெவல்கிராஸ் பகுதியில் மேளாதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.