தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு - வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு!

நீலகிரி: குன்னூர் அருகே சாலை வசதி அமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி, தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

boycott local election
boycott local election

By

Published : Dec 23, 2019, 12:37 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேலூர் ஊராட்சியில் கீழ் டெரேமியா குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களாகவும், விவசாயிகளாகவும் உள்ளனர்.

இந்த கிராமத்திற்கு செல்லும் குறுகலான சாலையில் வாகனங்கள் சென்று வர முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல ஆண்டுகளாக மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றால் கூட நோயாளிகளை நாற்காலியில் அமர வைத்து, 3 கி.மீ., தூரத்திற்கு தூக்கிச் சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டிய அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

அவசர தேவைக்கு செல்ல கூட வாகன வசதி இல்லாமல் உள்ளது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி டெரேமியா குடியிருப்பு பகுதி மக்கள் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மக்கள் ஒன்றுசேர்ந்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மக்கள் கால்களில் விழுந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details