நீலகிரி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி இன்று(செப்.28) உதகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிஎஃப்ஐ அமைப்பை மத்திய அரசு தடை செய்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ”பிஎஃப்ஐ அமைப்புகளின் மீது என்ஐஏ கடும் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். உண்மையிலேயே நமக்கு PFI அமைப்பின் பின்புலம் என்ன? அவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா? வன்முறையில் அவர்களுக்குப் பங்கு இருக்கிறதா? என்பது தெரியவில்லை.
பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்ய காரணம் என்ன...? - கே.எஸ் அழகிரி கேள்வி - பி எஃப் ஐ
பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்ததற்கான காரணத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி மக்கள் மன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
ஆனால் நான் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்வதற்கு முன்பு அன்றைய உள்துறை அமைச்சர் பாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஏன் தடை செய்கிறோம் என்பதற்கான காரணங்களை விளக்கி நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் ஆதாரபூர்வமாக விளக்கம் அளித்தார்.
அதைப் போல இன்றைக்குள்ள பாரதிய ஜனதா அரசு பிஎஃப்ஐ-க்கு எதிரான காரணங்களை மக்கள் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதற்கு ஆதார பூர்வமான அறிக்கையை வெளியிட வேண்டும் . அவ்வாறு ஆதாரபூர்வ அறிக்கை வெளியிட்டால் தான் பாரதி ஜனதா அரசு நாட்டின் பாதுகாப்பிற்காக பிஎஃப்ஐ அமைப்பை தடைசெய்துள்ளதா? அல்லது அரசியல் எதிரிகளை வீழ்த்த தடை செய்துள்ளதா? என்பது தெரிய வரும்” எனத் தெரிவித்தார்.