நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீபகாலமாகக் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலைத் தோட்டத்திற்கான சாலைகளிலும் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இந்நிலையில், கோத்தகிரியிலிருந்து தாந்தநாடு கிராமத்திற்குச் செல்லும் சாலையில் கரடி ஒன்று நின்று கொண்டிருந்தது.
இதனைக்கண்ட வாகன ஓட்டிகள், அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தினர். சுமார் 20 நிமிடங்கள் சாலையில் நடந்து சென்ற அக்கரடி, அருகேயுள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. அதன் பின்னரே வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.