நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நாவல் மரங்களில் தற்போது நாவல் பழம் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் பழங்கள் காய்த்து கொத்து கொத்தாகத் தொங்குகின்றன.
கோத்தகிரியில் நாவல் பழம் தேடி வரும் கரடிகள் கூட்டம் : அச்சத்தில் மக்கள்!
நீலகிரி : கோத்தகிரியில் நாவல் பழம் சீசன் தொடங்கியதை அடுத்து, பழங்களை சாப்பிட கரடிகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், இப்பழங்களை உண்பதற்காக வனப்பகுதியிலிருந்து கரடிகள் வெளியே வருவது மட்டுமின்றி, குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களிலும் அவை முகாமிட்டுள்ளன.
இதனால், தேயிலை பறிக்கச் செல்லும் தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, இவ்வாறு உலா வரும் கரடிகளால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.