தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரத்திலிருந்து தவறி விழுந்து கரடி பலி! - செம்மநாரை காப்புக்காட்டை

நீலகிரி: கோத்தகிரி அருகே நாவல் பழ மரத்திலிருந்து தவறி விழுந்த கரடி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

bear

By

Published : Jun 16, 2019, 7:21 PM IST

கீழ் கோத்தகிரியை அடுத்துள்ள செம்மநாரை காப்புக்காட்டை ஒட்டிய தேயிலைத் தோட்டப் பகுதியில் கரடி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்துள்ளது.

அதனடிப்படையில், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

அப்போது, அங்கு சுமார் ஒன்பது வயது மதிக்கத்தக்க பெண் கரடி ஒன்று இறந்திருப்பதை உறுதிசெய்து உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், தேயிலைத் தோட்டத்திலிருந்த உயரமான நாவல் பழ மரத்தில் ஏறிய கரடி, மரத்தின் கிளை முறிந்து கீழேயிருந்த பாறை மீது விழுந்து காயம் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

கரடியின் உடலை ஆய்வு செய்யும் வனத்துறையினர்

இதனைத் தொடர்ந்து, கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ஆய்வுக்கு உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டு கரடியின் உடல் எரியூட்டப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details