நீலகிரிமாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தற்போது பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளனர். இவர்களின் நீண்ட நாள்களாக பழங்குடியினர் பட்டியலில் தங்களின் சமூகத்தைச் சேர்க்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் பேசியதாவது, “படுகர் சமுதாய மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் உள்ளதால் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை.