நீலகிரி மாவட்டத்தில் 56 சதவிகிதம் வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இதில், மசினகுடி, சிங்காரா, ஆனைகட்டி, முதுமலை ஆகிய வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன.
குட்டி யானை மர்ம மரணம்: வனத்துறையினர் தீவிர விசாரணை - investigation
நீலகிரி: குட்டி யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குட்டி யானை
இந்நிலையில், சிங்காரா சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தனியாருக்குச் சொந்தமான நார்தன் ஹே எஸ்டேட்டில் நான்கு மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தனியாருக்குச் சொந்தமான இடத்தில் யானை குட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.