நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதியில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை ஏடிஎம் உள்ளிட்டவைகளுக்காக மூன்று கிலோமீட்டர் தூரமுள்ள குன்னூர் நகரப் பகுதிக்கு சென்று வந்தனர்.
ஏடிஎம் மையம் விலங்குகளின் கூடாரம் - koonoor
நீலகிரி: குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள ஏடிஎம் மையம் விலங்குகளின் கூடாரமாக மாறியுள்ளது.
ஏடிஎம்
இதனால் வெலிங்டன் மக்கள் வசதிக்காக கன்டோன்மென்ட் அலுவலகம் முன்பு எஸ்பிஐ வங்கி மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஏடிஎம் மையம் ஒரு மாத காலமாக செயல்படாமல் உள்ளது.
இதன் காரணமாக இங்கு சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் இங்கு வந்து உறங்குகின்றன. எனவே இந்த மையத்தை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வலியுறுத்திள்ளனர்.