தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி: காணொலி காட்சி வாயிலாக கலைஞர் சிலையை திறந்து வைத்த ஸ்டாலின் - திமுக தலைவர் ஸ்டாலின்

நீலகிரி: கரோனாவை விட அதிமுக அரசு கொடூரமாகச் செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீலகிரியில் கலைஞர் கருணாநிதியின் மார்பளவு சிலை திறப்பு!
நீலகிரியில் கலைஞர் கருணாநிதியின் மார்பளவு சிலை திறப்பு!

By

Published : Aug 24, 2020, 4:24 PM IST

உதகையில் இருக்கும் நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மார்பளவு சிலை திறந்து வைக்கபட்டது. இதனை சென்னையில் இருந்தவாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக24) காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் காணொலியில் பேசியதாவது: “ மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நீலகிரி மாவட்டத்தின் மீது தனி கவனம் இருந்தது. அதனால் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு முக்கியதுவம் அளித்தார். கடந்த 1970-ஆம் ஆண்டு மத்திய அரசு உதகை மலை ரயில் சேவையை நிறுத்த முடிவுசெய்தது.

ஆனால் கலைஞர் கருணாநிதி அதனை தடுத்து நிறுத்தினார். தற்போது மலை ரயிலுக்கு யுனஸ்கோ பிரம்பரிய சின்ன அந்தஸ்து பெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் பெய்த கன மழையால் பாதிக்கபட்டப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன்.

ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று பார்க்கவில்லை. தற்போதைய அரசு அழுத பிள்ளைக்கு மட்டும் அல்ல; அழாத பிள்ளைக்கும் கூட உணவு தராத அரசாவும், கரோனாவை விட மோசமான ஆட்சியாகவும் இருக்கிறது. இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து கோட்டையையும், தமிழ்நாடு மக்களையும் பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டும்”என்றார்.

நீலகிரியில் கலைஞர் கருணாநிதியின் மார்பளவு சிலை திறப்பு!

இதையும் படிங்க:அதிமுக ஒரு தலைமுறை இளைஞர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்துள்ளது - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details