நீலகிரி மாவட்டம் உதகையில் படுகர் இன மக்கள் அதிகளவில் வசித்துவருகின்றனர். இவர்களின் குலதெய்வ கோயிலில் ஆண்டுதோறும் தெவ்வ பண்டிகை என்னும் அறுவடை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கீழ்குந்தா கிராமத்தில் உள்ள கோயிலில் பார்பத்தி என்னும் படுகர் சமுதாய தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த திருவிழாவில் மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாராப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்வார்கள்.
கோயில் திருவிழாவிற்கு இடையூறு - அதிமுக மாவட்டச் செயலாளர் மீது புகார் - அதிமுக மாவட்டச் செயலாளர் மீது புகார்
உதகை: குலதெய்வ கோயில் திருவிழாவை நடத்தவிடாமல் தடுக்கும் நீலகிரி அதிமுக மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி படுகர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர் புத்திசந்திரன், பார்பத்தி என்னும் சமுதாய தலைவரை நீக்கிவிட்டு அவருக்கு சாதகமான ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் தலைமையில் திருவிழா நடத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவரது இந்த செயலுக்கு மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 14 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், அந்த 14 கிராம மக்களும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திருவிழா நடத்த உதவுமாறு மனு அளித்தனர். அந்த மனுவில், 'சில ஆண்டுகளாக புத்திசந்திரன் திருவிழா நடத்தவிடாமல் தடுத்துவருகிறார். கிராம மக்களுக்கு சாதகமாக வரும் அரசு அலுவலர்களையும், காவல் துறையையும் மிரட்டுகிறார். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடடிக்கை எடுத்து இந்தாண்டு திருவிழாவை எவ்வித தடைகளுமின்றி நடத்த உதவ வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர்.