தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் அருகே சுவரேறி குதிக்கும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை - குன்னூரில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தையால் பீதி

குன்னூரில் அருகே வீடொன்றில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வந்து செல்லும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கவேண்டுமென வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறுத்தை
சிறுத்தை

By

Published : Aug 14, 2022, 8:04 PM IST

நீலகிரி:குன்னூர்-அம்பிகாபுரம் பகுதியில் சிறுத்தையொன்று, பங்களாவிற்குள் 3 நாட்களாக வந்து சென்ற சிசிடிவி காட்சிகளால் அப்பகுதியினர் பீதியடைந்துள்ளனர். குன்னூரில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அம்பிகாபுரம் பகுதியில் முருகன் என்பவரின் பங்களா சுற்றுச்சுவரைத்தாண்டி சிறுத்தை ஒன்று உள்ளே நுழைந்தது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. உள்ளே நுழைந்த சிறுத்தையானது, சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பியது.

இரண்டு நாள்களுக்குப்பிறகு, இதேபோல சிறுத்தை முன்பைப் போல சுற்றுச்சுவரைத் தாண்டி மீண்டும் வீட்டிற்குள் நுழைந்ததை சிசிடிவியில் கண்ட வீட்டார் தொடர்ந்து 2 முறை வீட்டிற்கு சிறுத்தை வந்து செல்வதால் அச்சத்தில் உள்ளனர். தவிர, அங்கு தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வீடு திரும்புவோர்களும் பள்ளிகளுக்குச்சென்று வரும் மாணவ-மாணவிகளும் சிறுத்தை குறித்த அச்சத்தில் உள்ளனர்.

தினமும் இரவில் சுவரேறி குதித்து நோட்டமிடும் சிறுத்தையால் பீதி..

எனவே, வனத்துறை அப்பகுதியில் அச்சுறுத்தலாக உள்ள இச்சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோத்தகிரி அருகே குட்டியைத் தேடி வரும் ஒற்றைக் கரடி கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details