நீலகிரி மாவட்டம் உதகை மசினகுடி வாழைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (24). இவர் கூலி வேலை செய்துவருகிறார். இவர் 2018ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதியன்று அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டு, மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவியை திருமணம் செய்துகொண்டு பாலியல் வன்புணர்வுசெய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை! - பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை
நீலகிரி: உதகை அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்துகொண்டு பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருமண ஆசைக்காட்டி பள்ளி மாணவி வன்புணர்வு
இதையடுத்து, மாணவியின் தாயார் சுந்தரி கொடுத்த புகாரின்பேரில் மசினகுடி காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர். இவ்வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி அருணாசலம் குற்றஞ்சாட்டப்பட்ட ஈஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் சிக்கிய கபீர் ஆசிரமம்... சட்டவிரோத கட்டடத்தை இடிக்க உத்தரவு!