தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிருபராக மாறிய சிறுவன்; சேட்டை வீடியோ வைரல் - சேட்டை வீடியோ வைரல்

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அணை நிரம்பி காட்டாற்று வெள்ளம் சென்றதை படம்பிடித்து தொலைக்காட்சி நிருபராக மாறிய சிறுவனின் சேட்டை வீடியோ வைரலாகி வருகிறது.

நிருபராக மாறிய சிறுவன்; சேட்டை வீடியோ வைரல்
நிருபராக மாறிய சிறுவன்; சேட்டை வீடியோ வைரல்

By

Published : Jul 16, 2022, 11:56 AM IST

Updated : Jul 16, 2022, 12:32 PM IST

நீலகிரி:மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கூடலூர் பகுதிகளில் அணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடலூர் சொக்கநள்ளி அருகே உள்ள தடுப்பு அணையில் காட்டாற்று வெள்ளம் நிரம்பி செல்வதை தொலைக்காட்சி நிருபர்கள் தொகுத்து வழங்குவது போல் அப்பகுதியை சார்ந்த சிறுவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

நிருபராக மாறிய சிறுவன்; சேட்டை வீடியோ வைரல்

அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் டேம் நிறைந்து காங்கிரட்டில் மட்டுமே தண்ணீர் செல்கிறது எனவும், அரசு திட்டியதால் நமது தனியார் பள்ளி, இரண்டு மாதத்திற்கு விடுமுறை அளித்துள்ளதாக அச்சிறுவன் கூறியுள்ள வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:'குழந்தைகளால் முடியும்போது... நம்மால் முடியாதா...?' - உச்ச நீதிமன்ற நீதிபதி

Last Updated : Jul 16, 2022, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details