இந்தியாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதில் வெடிமருந்துகளை தயாாிக்கும் 11 தொழிற்சாலைகளும் அடங்கும். தமிழ்நாட்டில் குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு, திருச்சி, சென்னையிலுள்ள ஆவடி ஆகிய இடங்களில் 6 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து தொழிற்சங்கங்கள் தனியாா் மயமாக்கும் திட்டத்தை கைவிடக் கோாி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்த நிலையில் குன்னுாா், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கூட்டுக்குழு சாா்பாக நீலகிாி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாக்கு அழைப்பு விடுகப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட நீலகிாி நாடாளுமன்ற உறுப்பினா் ஆ. ராசா தொழிலாளா்களிடமும், தொழிற்சங்கத்திடமும் கலந்துரையாடினாா்.