தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 டன் அன்னாசி பழம் கொண்டு ஜாம், பழரசம் தயாரிப்பு! - அன்னாசி பழ ரசம்

நீலகிரி: தோட்டக்கலைத் துறை சார்பாக வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 3 டன் அளவிலான அன்னாசி பழங்களைக் கொண்டு ஜாம் மற்றும் பழரசம் தயாரிக்கும் பணி தொடங்கியது.

3-tons-of-pineapple-jam-juice-preparation
3-tons-of-pineapple-jam-juice-preparation

By

Published : Jan 31, 2021, 10:14 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னுார் பகுதிகளில் பிளம்ஸ், பேரி, பீச், ஊட்டி ஆப்பிள், துரியன், மங்குஸ்தான் உள்பட பல்வேறு வகையான பழங்கள் விளைகின்றன. இதனால், மாவட்ட தோட்டக்கலைத் துறையின் கீழ், குன்னுார் சிம்ஸ்பார்க் அருகே பழவியல் நிலையத்தில், பல்வேறு பழங்களை கொண்டு ஜாம், ஸ்குவாஸ், ஊறுகாய் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கன்னியாகுமரி, பேச்சிப்பாறை தோட்டக்கலை துறை உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 3 டன் அளவிளான அன்னாசி பழத்தில் ஜாம், பழரசம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் 300 கிராம் ஜாம் 90 ரூபாய்க்கும், 500 கிராம் ஜாம் 110 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

3 டன் அன்னாசியைக் கொண்டு ஜாம், பழரசம் தயாரிப்பு

அதேபோல் 700 மி.லிட்டர் அளவு கொண்ட அன்னாசி பழ ரசம் 135 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவை தோட்டக்கலையின் கீழ் உள்ள விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறன.

இதையும் படிங்க:மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் கொத்து கொத்தாக மடிந்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details