நீலகிரி:கோத்தகிரியில் கொடநாடு வழக்கு தொடர்பாக ஆவணங்களை மலையாள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தது சம்மந்தமாக கோத்தகிரியில் உள்ள மணிகண்டன் மற்றும் ஏற்கனவே சாட்சி கூறியது தொடர்பாக கர்சன் செல்வம், ஜெயசீலன் ஆகிய மூன்று பேருக்கு சிபிசிஐடி போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கொடநாடு வழக்கு விசாரணையானது தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனிப்படை போலீசார் 320 பேரிடம் விசாரணை மேற்கொண்டு 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டன. தற்போது, கோடநாடு வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 720 தொலைபேசி உரையாடல்கள் வைத்து, இதுவரை 48 பேரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்நிலையில், குறிப்பாக கொடநாடு சம்பவம் நடைபெற்றபோது, நீலகிரி மாவட்ட எஸ்பியாக முரளி ரம்பா உள்ளிட்ட முக்கிய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையிலும் இவ்வழக்கின் விசாரணையானது தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோத்தகிரியில் உள்ள கொடநாடு வழக்கு தொடர்பாக ஆவணங்களை மலையாள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தது சம்பந்தமாக மணிகண்டனுக்கும், சாட்சிகளின் அடிப்படையில் விசாரணைக்காக கர்சன் செல்வம், ஜெயசீலன் ஆகிய மூன்று பேரை வரும் 7 ஆம் தேதி காலை பத்து மணிக்கு கோவை காவலர் பயிற்சி பள்ளியில் விசாரிக்க சிபிசிஐடி போலிசார் மூலம் சம்மன் வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் முட்டைக்கோஸ் விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை!