தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு! - மக்களவைத்தொகுதி

நீலகிரி: பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை தேர்தல் நடத்தும் அலுவலர் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்தார்

இன்னசென்ட் திவ்யா

By

Published : Apr 8, 2019, 7:10 AM IST

நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வாக்குப்பதிவு மற்றும் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ’விவிபேட்’ (வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம்) ஆகியவைகளின் பயன்பாடு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.

அப்போது தேர்தலில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குப்பதிவு கையேடு, விவிபேட் பயன்படுத்தும் முறை மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து அவர் ஆய்வு செய்தார்.

இதில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 1299 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அலுவலர்களிடம், “வாக்குப்பதிவு நடைபெறும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு கட்சி முகவர்கள் முன்னிலையில் 50 பேருக்கு மாதரி வாக்குப்பதிவு செய்து விவிபேட்டில் பதிவு ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்து அனைவரும் உறுதி செய்தபின்னரே வாக்குப்பதிவை தொடங்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரம பழுதானால் அதனை சரிசெய்வது அல்லது மாற்றுவது போன்ற சந்தேகங்களுக்கு பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 694 வாக்குகள் மட்டுமே தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details