நீலகிரி: குன்னூர் - கோத்தகிரி சாலையில், தனியா ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் மேலாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனால் ஹோட்டலில் உள்ள ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 28 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தொற்று உறுதியான அனைவரும் அதே ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.