காசிக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்று ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கையில் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் குன்னுாரைச் சேர்ந்த சுப்பையா, பாலகிருஷ்ணன் ஆகியோரின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு விமானம் மூலம் கோவை கொண்டுவரப்பட்டன. பின்பு அங்கிருந்து அமரர் ஊர்தி மூலம் குன்னுாரில் உள்ள ஓட்டுப் பட்டறைப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டன.
காசி யாத்திரை! உயிரிழந்த இருவர் உடல் நல்லடக்கம்
நீலகிரி: காசிக்கு யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அதில் குன்னுாரைச் சேர்ந்த இருவரது உடல்கள் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவ வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.
coonoor
அங்கு வைக்கப்பட்ட அவர்களின் உடல்களுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, மயானத்தில் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. ஆன்மிக சுற்றுப் பயணம் சென்று இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.