நீலகிரி: குன்னூர் அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் தேவைக்கு, கோயம்புத்தூரிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டன.
ஆக்சிஜன் பிளான்ட்
இதனால் காலதாமதமாகச் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்படுவதாக, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதன் தொடர்ச்சியாக, குன்னூர் அரசு மருத்துவமனையில், தன்னார்வலர்கள் இணைந்து 70 லட்சம் ரூபாய் மதிப்பில் தானியங்கி ஆக்சிஜன் கொள்கலன் 'பிளான்ட்' அமைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று (ஜூன் 28) திறந்துவைத்தார். இந்த பிளான்ட் மூலம் ஒரு நிமிடத்திற்கு, 500 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். இதன்மூலம், 16 படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் கொள்கலன் 'பிளான்ட்' தடுப்பூசி இலக்கு
இந்த நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர், "நீலகிரி மாவட்டத்தில் 27 ஆயிரத்து 500 பழங்குடியினர் உள்ளனர். இதில் தடுப்பூசி செலுத்த அரசு தெரிவித்துள்ள வயதுக்குள்பட்டவர்கள் 21 ஆயிரத்து 800 பேர் ஆவர். இதில் 21 ஆயிரத்து 500 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 250 முதல் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்துவருகிறது. இன்று (ஜூன் 29) விடுபட்ட பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 விழுக்காடு என்ற நிலையை அடைய இருக்கிறோம்.
ஆக்சிஜன் கொள்கலன் 'பிளான்ட்' தேயிலைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2.89 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சிறைத் தண்டனை கைதிகளுக்கு தடுப்பூசி!