தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கம்பன் கழகம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழருவி மணியன் கலந்து கொண்டார்.
பாலியல் சம்பவங்களை கட்டுப்படுத்த இத செய்யுங்க! தமிழருவி மணியன் பலே ஐடியா - கம்பராமாயணம்
தஞ்சை: பாலியல் சம்பவங்களை தடுக்க இளைஞர்களுக்கு கம்பராமாயணத்தை புகட்ட வேண்டும் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
File pic
இந்நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் பேசியதாவது, 'தமிழ்நாட்டில் பொள்ளாச்சி சம்பவம் போன்று ஒவ்வொரு நாளும் நடைபெற்றுவருவது வேதனையளிக்கிறது. இது நம்மையெல்லாம் வேதனையடையச் செய்துள்ளது.
இதை மாற்ற வேண்டும் என்றால் ஒவ்வொரு இளைஞனையும் வரவழைத்து அவர்களிடத்தில் கம்பராமாயணத்தை பற்றி விளக்கிச் சொல்ல வேண்டும். கம்பராமாயணத்தில் காமம் சார்ந்த கட்டுப்பாடுகள் பற்றி அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இல்லை' என்று தெரிவித்தார்.