தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முகநூல் காதல்' - 35 வயது பெண்ணுடன் எஸ்கேப் ஆன 20 வயது இளைஞர்!

தஞ்சாவூர்: முகநூலில் காதலித்து கல்லூரி மாணவனுடன் தப்பி ஓடிய 35 வயது மலேசிய பெண்னை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

facebook love

By

Published : Sep 2, 2019, 10:11 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள பொன்னமராவதி பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் மணிகண்டன் பிரபு(20). தனியார் கல்லூரியில் இளநிலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்திருக்கிறார். இந்நிலையில், இவருக்கும் மலேசியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஏற்கனவே திருமணமான பிரியா(35) என்பவருக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளைடைவில் காதலாக மாறியது.

இதனைத் தொடர்ந்து, இருவரும் முகநூலில் காதலித்து வந்த நிலையில் கடந்த வாரம் பிரியா மலேசியாவில் இருந்து பட்டுக்கோட்டையில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளார். அங்கு மணிகண்டனும், பிரியாவும் சந்தித்தாக கூறப்படுகிறது. பின்னர் அங்கே இருந்து இருவரும் மாயமாகி உள்ளனர்.

மாயமான இளைஞர் மணிகண்டன்

இதயையடுத்து மணிகண்டன் வீட்டிற்கு வராததையடுத்து அவரது நண்பர்களிடம் விசாரித்த போது பிரியாவை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து பொன்னமராவதி காவல்நிலையத்தில் மணிகண்டனின் தாயார் அன்பரசி புகார் அளித்தார். தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரும்
வெளிநாட்டிற்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details