தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 5, 2019, 2:13 PM IST

ETV Bharat / state

’இந்தி மொழி வேண்டும்’ என நகரெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தஞ்சாவூர்: ’இந்தி மொழி வேண்டும்’ என நகரெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

போஸ்டரால் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு மும்மொழி கல்வித் திட்டத்தின் வரைவறிக்கையின்படி இந்தி மொழி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது பாடமாக இந்தி படிப்பது கட்டாயம் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு பல தரப்பு மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டால் மீண்டும் 1965ஆம் ஆண்டு மொழிப்போர் வெடித்ததைப் போல மீண்டும் போராட்டம் வெடிக்கும் என பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மத்திய அரசு திட்ட வரைவு அறிக்கையில் திருத்தம் செய்து மும்மொழி கல்வித் திட்டத்தை கைவிட்டது.

இந்நிலையில், தஞ்சாவூரின் முக்கிய கடை வீதியான அரண்மனை ரோடு, அதனைச் சுற்றியுள்ள நகரப்பகுதிகளில் இந்து மக்கள் கட்சியினர் எங்களுக்கு இந்தி வேண்டும் என்ற தலைப்புடன் நாடெங்கும் நவோதயா பள்ளியை திறந்திடு என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டினார்.

தமிழ்நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்துவரும் வேளையில் இந்து மக்கள் கட்சியினர் ஒட்டிய இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details