தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பயிர் காப்பீட்டு நிவாரண தொகையை உரிய முறையில் வழங்கக்கோரியும், கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.