தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு! - கும்பகோணம் எருத்துக்கார தெரு

நாதன்கோவில் திருமலைராஜன் ஆற்றில் மாணவர்கள் இருவர் எதிர்பாராத விதமாக மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் இருவர் உயிரிழப்பு
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் இருவர் உயிரிழப்பு

By

Published : Jul 10, 2022, 8:27 PM IST

தஞ்சாவூர்: இன்று பக்ரீத் மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு கும்பகோணம் எருத்துக்கார தெருவை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஹரன் (15) மற்றும் ஐயங்கார் தெருவை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசன்னா (16) ஆகிய இருவரும் நாதன்கோவில் திருமலைராஜன் ஆற்றுக்கு சென்று உற்சாக குளியல் போட்டுள்ளனர்.

அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் ஆற்று நீரில் முழங்கி உயிரிழந்த சம்பவம் நாதன்கோயில் பகுதியில் பெரும் சோகத்தினையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உலகின் விலை உயர்ந்த மாம்பழம் திருட்டு: ஒரு கிலோ ரூ.2.7 லட்சம்!

ABOUT THE AUTHOR

...view details