தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இரட்டைக்குழல் துப்பாக்கியாக அதிமுக - அமமுக செயல்படும்' - வைத்திலிங்கம் - cm stalin

திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பு எதையெல்லாம் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று போராட்டம் நடத்தினார்களோ, அதையெல்லாம் இன்றைக்கு தூக்கி எறிந்து விட்டு தமிழ்நாட்டில் ஒரு கொடுங்கோல் ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் உடன் இனையும் வைத்திலிங்கம்?
டிடிவி தினகரன் உடன் இனையும் வைத்திலிங்கம்?

By

Published : Jun 13, 2023, 8:05 AM IST

Updated : Jun 13, 2023, 8:31 AM IST

வைத்திலிங்கம் மற்றும் டிடிவி தினகரன் மேடைப்பேச்சு

தஞ்சாவூர்:தஞ்சை தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ஒரத்தநாட்டில் திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் நேற்று (ஜூன் 12) நடைபெற்றது. இந்தக் கூட்டம் அமமுக துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான ஆர். வைத்திலிங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ”திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமே சுய நலக்காரராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமிதான். நாங்கள் சொன்னதை கேட்டிருந்தால் அதிமுக ஆட்சிதான் ஆண்டு கொண்டிருக்கும். தற்போது மின்சார வெட்டு, கள்ளச் சாராயம் என திமுக ஆட்சியில் நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது.

எங்களை எதிரிகள் நெஞ்சில் குத்தினால் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், துரோகிகள் நம் இயக்கத்தை ஆளுங்கட்சியாக வருவதை தடுத்து விட்டார்கள். அதை முறியடுத்து அதிமுகவும், அமமுகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும். மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டு வருவதற்கு ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் அடித்தளமிட்டு இருக்கிறார்கள். வருகிற 2024ஆம் ஆண்டில் அதிமுக, அமமுக நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறும்” என தெரிவித்தார்.

பின்னர் பேசிய டிடிவி தினகரன், “காலத்தின் அருமை கருதி நாம் பிரிந்து இருந்தால், திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த முடியாது. திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. அதை தட்டிக் கேட்பதற்கும், இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்காக இணைந்திருக்கிற உண்மையான தொண்டர்கள் நாம் என்பதை எடுத்துக்காட்டி வருகிறீர்கள்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அலங்கரித்த தலைமை பதவியை இன்றைக்கு யாரோ ஒரு சிலர் கபளீகரம் செய்து விட்டார்கள். அவர்களிடம் இருந்து அதை மீட்டெடுப்பதற்காகத்தான் நானும், ஓபிஎஸ்சும் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, பதவிகளுக்கு அப்பாற்பட்டு நிலைமையை சரி செய்ய இனைந்துள்ளோம்.

இதன் வெளிப்பாடு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்கும். விழுந்து கிடந்த நாம் ஒரு சிலர் சுயநலத்தால் வசம்பு வார்த்தைகளால், இரட்டை இலை அங்கே இருக்கின்றது என்ற காரணத்தினால் பிரிந்து கிடந்தோம். ஆனால், நம் இரட்டை இலையை அவர்கள் மதிப்பிழக்க செய்து விட்டார்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக் குழுவோடு அந்த கட்சிக்கு சமாதி கட்டிவிட்டார்கள் என்பதை உணர்ந்து, அதிமுக தொண்டர்கள் அமமுக தொண்டர்களோடு தமிழ்நாடு முழுவதும் கைகோர்த்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பு எதையெல்லாம் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று போராட்டம் நடத்தினார்களோ, அதையெல்லாம் இன்றைக்கு தூக்கி எறிந்து விட்டு, தமிழ்நாட்டில் ஒரு கொடுங்கோல் ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார் என்பது தான் உண்மை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோடை விடுமுறை முடித்து பள்ளி சென்ற மாணவர்கள் வேதனை.. வேலூரில் நடந்தது என்ன?

Last Updated : Jun 13, 2023, 8:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details