தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தினம்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோயிலைத் தரிசித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சிலநாட்களாக குடமுழுக்குத் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரிய கோயிலுக்கு வரும் காதல் ஜோடிகள், அங்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் கோயிலின் புனிதத் தன்மை இழந்து விடும் என்று சில பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.