தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிராக்டர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு: தலைமறைவான வாகன ஓட்டுநர் கைது! - டிராக்டர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: அரசூர் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

டிராக்டர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு
டிராக்டர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு

By

Published : Jan 4, 2021, 9:57 AM IST

தஞ்சாவூர், கீழ புனவாசல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32), சக்குபாய் (70), பிரகாஷ் என்பவரது மகன்கள் அகிலேஷ் (12), பரணீஸ் (10) ஆகிய நான்கு பேரும் நேற்று (ஜன.03) அரசூர் முக்கிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன், சக்குபாய், அகிலேஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில், பரணீஸ் என்பவர் சிறு காயங்களுடன் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு காவல் துறையினர், மூவரது சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று கடலூர் மாவட்டம் பன்ருட்டியைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் லாரி ஓட்டுநர் ராமதாஸ் (32) என்பவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details