புதுக்கோட்டை அருகே வீடு கட்டுமானத்தின் போது மீட்கப்பட்ட சிலையை கடத்த உதவியதாக ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர்பாட்சா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் கும்பகோணம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேல் காதர்பாட்சா ஜாமீன் மனுவை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
சிலை கடத்தல் விவகாரம் - கும்பகோணம் நீதிமன்றத்தில் காரசார வாதம்..! - பொன்.மாணிக்கவேல்
தஞ்சாவூர்: சிலை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர்பாட்சாவின் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக அவரது தரப்பு வழக்கறிஞர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலர் பொன்.மாணிக்கவேல் இடையே வியாழக்கிழமை கும்பகோணம் நீதிமன்றத்தில் கார சார வாதம் நடைபெற்றது.
அப்போது காதர் பாட்சா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பாக நடைபெற்ற வாதங்கள் அடங்கிய சிசிடிவி காட்சிகள், அது தொடர்பான எழுத்துப் பூர்வமான ஆதாரங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஜாமீனை ரத்து செய்ய வாதம் செய்வதாகவும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிலையே இல்லை எனவும் காதர்பாட்சா தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாதவ ராமானுஜம், வரும் 9ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.