தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகில் உள்ள 18 கிராமங்களை உள்ளடக்கிய பின்னையூர் நாட்டில் அமைந்துள்ள அருள்மிகு திருத்தாண்டி அய்யனார், அருள்மிகு பிடாரி அம்மன், அருள்மிகு சூலப்பிடாரி அம்மன் ஆலயங்களின் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தூக்குத் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் தேரை தோளில் சுமந்து செல்வது இவ்விழாவின் சிறப்பு அம்சமாகும்.
பல ஆண்டுகளுக்கும் மேலாக நடைப்பெற்று வரும் இந்த விழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து, கோலாட்டம், கும்மி ஆடி முன் செல்ல தூக்குத் தேர் பின் தொடர்ந்து வந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரை சக்கரம் கொண்டு வட இழுத்துச் செல்லாமல் பக்தர்கள் தோளில் சுமந்து வந்து பல்வேறு இடங்களுக்கும் தேரைக் தூக்கிச் சென்றனர். எந்த இடத்தில் இருந்து தேர் புறப்பட்டதோ மீண்டும் அந்த தேர் நிலைக்கு வரும் வரை வேறு எந்த இடத்திலும் இறக்கி வைக்காமல் தோளில் சுமந்து வருவதால் இதை தூக்குத் தேர் என அழைக்கப்படுகிறது.