தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் ஆன்லைன் மூலம் ஹைடெக் விபச்சாரம்.. 2 பெண்கள் உட்பட மூவர் கைது! - Thanjavur news today

கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் ஆன்லைன் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் உள்பட மூவர் கைது!
ஆன்லைன் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் உள்பட மூவர் கைது!

By

Published : Feb 16, 2023, 1:16 PM IST

கும்பகோணம்:தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மேற்பார்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பேபி மற்றும் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையிலான சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார், தலைமைக் காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, பார்த்திபநாதன், செந்தில்குமார், ஜனார்த்தனன் மற்றும் பெண் காவலர் சீதா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது செல்போன் மூலமாக ஆன்லைனில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த சோழபுரம் பரமேஸ்வரன் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 3 பேரை கும்பகோணம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, 10,000 ரூபாய் ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து சோழபுரம் பரமேஸ்வரன் மட்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவின்படி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறு ஆன்லைன் மூலம் ஹைடெக் முறையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம், கும்பகோணம் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:ஆன்லைன் கேம் மோகம்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சித்தப்பா மகன் கைது!

ABOUT THE AUTHOR

...view details