சந்திரகிரகணத்தை ஒட்டி அனைத்து ஆலயங்களும் மூடப்படுவது வழக்கம். ஆனால் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் மட்டும் கிரகண நேரத்தில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறவுள்ளது.
தியாகராஜ சுவாமி கோயில் சந்திர கிரகண நடைதிறப்பு - தியாகராஜ சுவாமி
திருவாரூர்: தியாகராஜ சுவாமி ஆலயத்தில் மட்டும் சந்திர கிரகண நேரத்தில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது.
சந்திர கிரகணத்தை ஒட்டி இரவு கோயில் மூடாமல் நள்ளிரவு ஒருமணியளவில் தியாகராஜ சுவாமிக்கு சந்திரகிரகண மகா அபிஷேகம் பூர்வாங்க பூஜையுடன் துவங்கி, கடங்கள் வைக்கப்பட்டு சந்திரகிரகணம் துவங்கும் நேரத்தில் அபிஷேகம் துவங்கி பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் எலுமிச்சை சாறு, கரும்பு சாறு, சந்தனம் போன்ற அபிஷேகங்களும், சங்கு அபிஷேகங்கள் நடைப்பெற்று, கிரகணம் முடியும் நேரத்தில் வலம்புரி சங்கில் பன்னீர் ஊற்றி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு நிறைவடையும்.
திருவாரூரில் வீற்றிருக்கும் சுவாமி, அனைத்து தோஷங்களையும் ஏற்று, மக்களுக்கு தோஷம் ஏற்படா வண்ணம் காக்கவே நடை திறக்கப்படுகிறது. இது ஐதீகம் என்று ஆன்மீக பெரியவர்கள் தெரிவித்துள்ளனர்.